×

கடவுள் கொடுத்த கடைசி வாய்ப்பு: உதயா உருக்கம்

 

சென்னை: ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயா கரன் சினி புரொடக்‌ஷன், மை ஸ்டுடி யோஸ் சார்பில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் தயாரிக்க, டான்ஸ் மாஸ்டர் பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் வெளியான ‘அக்யூஸ்ட்’ என்ற படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து நடந்த நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் ஏ.எல்.உதயா உருக்கமாக பேசியதாவது:இந்த வெற்றியை பெற 25 ஆண்டுகளாகி விட்டது.

இப்படம் 3வது வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது கடவுள் எனக்கு கொடுத்த கடைசி வாய்ப்பு. எனக்கு தன்னம் பிக்கை இருந்தாலும், மிகவும் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். அடுத்தடுத்து வெற்றிபெற கடுமையாக போராடுவேன். ‘அக்யூஸ்ட்’ டீம் மீண்டும் இணைய இருக்கிறது. ‘டண்டணக்கா டான்’ என்ற தலைப்பில் பிரபு ஸ்ரீநிவாஸ் ஒரு கதை சொல்லியிருக்கிறார். இதுபற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

 

Tags : God ,Udaya Urukkam ,Chennai ,A.L. Udaya ,Daya N. Panneerselvam ,M. Thangavel ,Jason Studios ,Sachin Cinemas ,Sridaya Karan Cine Production ,My Study Yos ,Prabhu Srinivas ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்