×

ஹாரர் திரில்லர் கதை நறுவீ

சென்னை: ஹரீஷ் சினிமாஸ் வழங்கும் ஏ. அழகு பாண்டியன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுபாரக் எம். இயக்கத்தில், மலைவாழ் மக்களின் நலன்களை பற்றிப்பேசும், ஹாரர் திரில்லர் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நறுவீ. இப்படம் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வு வேண்டும் என்கிற அக்கறையின் அடிப்படையில், இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார் அழகு பாண்டியன். மருத்துவம் படித்து முடித்துவிட்டு, தற்போது சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் டாக்டர் ஹரீஷ் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

இவருடன் வின்சு, வி.ஜே.பப்பு, பதினி குமார், ஜீவா ரவி, பிரவீணா, காதே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ் ராஜா, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். அஸ்வத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு – ஆனந்த் ராஜேந்திரன், எடிட்டிங் – சுபாரக் எம். தமிழகமெங்கும் பாஸ்கர் சினிமா கம்பெனி மற்றும் ஷிவானி ஸ்டூடியோஸ் வெளியிடுகிறது. போக்குவரத்து வசதியில்லாத கிராமங்களில் பெரும் சிரமத்துக்கு இடையே இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.

Tags : Chennai ,A. Azhughu Pandian ,Harish Cinemas ,Subarak M. ,Azhughu Pandian ,Harish ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்