டிஜிட்டலில் வெளியான வசந்த மாளிகை

1972ம் ஆண்டு வெளியான படம் வசந்த மாளிகை. சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ நடித்த இந்த படம் கதையமைப்பு, பாடல்களால் ரசிகர்களை கவர்ந்தது. அப்போது வெள்ளி விழாவும் கொண்டாடியது. இப்போது 47 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு தமிழகத்தில் 100 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.

ராமநாயுடு தயாரித்த இந்த படத்தை பிரகாஷ்ராவ் இயக்கினார். 1971ல் தெலுங்கில் பிரேம நகர் என்ற பெயரில் நாகேஸ்வரராவ், வாணி நடித்து வெளியானது. பின்னர் தமிழிலும் அதைத் தொடர்ந்து இந்தியிலும் ரீமேக் ஆனது. அனைத்து மொழிகளிலும் படம் சூப்பர் ஹிட்டானது.

× RELATED டிஜிட்டலில் வருகிறது வசந்த மாளிகை