
அபிஷன் ஜீவிந்த் இயக்கி சசிகுமார், சிம்ரன், உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மே 1ம் தேதி வெளியான படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்தின் பணி வெகுவாக பாராட்டப்பட்டது. சசிகுமாரின் திரைவாழ்க்கையில் இப்படம் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் மற்றும் ஏ.ஆர்.பி. எண்டர் டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்தது. இந்நிறுவனம் முன்னதாக ‘குட்நைட்’, ‘லவ்வர்’ போன்ற வெற்றிப் படங்களை தயாரித்தது. இந்நிலையில் எம்.ஆர்.பி. எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் மகேஷ் பசலியான் தயாரிக்கும் புதிய படத்தில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் பூஜை வரும் 3ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. ஹீரோயினாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் அபிஷன் ஜீவிந்திடம் உதவி இயக்குனராக இருந்த மதன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். முன்னதாக ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் 100 கோடி ரூபாய் வசூலை பெற்று சாதனை படைத்தது. இதனால் முதல் படத்திலேயே சென்சேஷ்னல் இயக்குனராக மாறிய அபிஷன்ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகும் படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
