
பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கடந்த 2003ம் ஆண்டு முதல் நாட்டிற்காக டென்னிஸ் விளையாடி வந்தார். 20 ஆண்டுகள் கழித்து கடந்த 2023ம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார். 2010ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை காதலித்து திருமணம் செய்தார். 15 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன் பிறகு சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை ஜனா என்பவரை மணந்தார். இந்நிலையில் சானியா மிர்சாவின் வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படமாக எடுக்க உள்ளனர்.
2019ம் ஆண்டே இதுகுறித்து அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது சானியா மிர்சா கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், பரினிதி சோப்ரா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தனது வாழ்க்கை வரலாறு படமாவது குறித்து சானியா மிர்சா பேசும்போது, ‘‘என் வாழ்க்கை வரலாறு படத்தில் அக் ஷய் குமார் நடித்தால் நன்றாக இருக்கும். நான் அவரது தீவிர ரசிகை. அந்த படத்தில் அக் ஷய் குமார் நடித்தால் அவரை காதலிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்’’ என்று ஜாலியாக சானியா மிர்சா பேசியுள்ளார்.
