சென்னை: கடந்த மார்ச் 14ம் தேதி, நானி தயாரிப்பில் வெளியான தெலுங்கு படம் ‘கோர்ட் ஸ்டேட் வெர்சஸ் நோபடி’. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையினைக் கைப்பற்றினார் நடிகர் தியாகராஜன். இதன் பணிகள் நீண்ட மாதங்களாக நடைபெற்று வந்தன. தற்போது இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் முடிவாகிவிட்டதாக பட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ‘கோர்ட்’ படத்தில் வரும் காதலர்கள் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசனின் மகன் கிருத்திக், தேவயானியின் மகள் இனியா இருவரும் நடிக்கவுள்ளார்கள். பிரியதர்ஷி என்ற வக்கீல் கதாபாத்திரத்தில் பிரசாந்த், சாய்குமார் கதாபாத்திரத்தில் தியாகராஜன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தினை தியாகராஜனும், கதிரேசனும் இணைந்து தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
