- ஹாலிவுட்
- ஆர் செல்வாமணி
- சென்னை
- திண்டுக்கல் அலெக்ஸ்
- செல்ல முத்தையா
- அங்கு விலாஸ்
- அக்னி மோகன்
- கடவூர் ஜமீன்
- விக்னேஷ் ரவி
- வினோத்
- தன்விக் அர்ஜுன்
- பா. கிரிஷ்…

சென்னை: தெருக்கூத்துக் கலைஞர்கள், கோமாளிகள் சம்பந்தப்பட்ட ஒரு த்ரில்லர் படமாக ‘300 கோமாளிகள்’ குறும்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் திண்டுக்கல் அலெக்ஸ், செல்ல முத்தையா (அங்கு விலாஸ்) ,அக்னி மோகன் (கடவூர் ஜமீன்),விக்னேஷ் ரவி, வினோத்,தன்விக் அர்ஜுன் நடித்துள்ளனர். இப்படத்தை பா.கிரிஷ் இயக்கி உள்ளார். சுபாஷ் பாரதி ஒளிப்பதிவு செய்துள்ளார் .யுவராஜ் சந்திரன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பிகே.
ஜெயந்த் விஷ்வாஸ் ஜேடி. திண்டுக்கல் அலெக்ஸ் மற்றும் அனு தயாரித்துள்ளனர். இந்த ‘300 கோமாளிகள்’ திரைப்படம் 14வது கொல்கத்தா சர்வதேச குறும்பட விழாவில் திரையீட்டுக்குத் தேர்வானதுடன் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதையும் பெற்றுக் கொடுத்துள்ளது. இந்தக் குறும்படத்தின் திரையீடு மற்றும் அறிமுக விழாவில் பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி பேசியது:
இந்தப் படத்தைப் பார்த்த பிறகு ஒரு புதிய படக் குழு திரையுலகில் நுழைவதற்குத் தயாராக இருக்கிறது என்பது புரிந்தது. இயக்குனர் கிரிஷை பாராட்டுகிறேன். இந்தக் குறும்படத்தை வைத்து பத்து கதைகள் உருவாக்கலாம். அந்த அளவுக்கான அடிப்படையும் பின்புலமும் அதில் உள்ளது. ஹாலிவுட்டில் மட்டும் தான் ஒரு திரைப்படத்தில் பணியாற்றுபவர்கள், அவர்களின் சம்பளம், வெற்றி தோல்வி அனைத்தையும் வெளிப்படையாக வைத்திருக்கிறார்கள். இந்திய சினிமாவில் குறிப்பாகத் தமிழ் சினிமாவில் அந்த வெளிப்படைத் தன்மையே கிடையாது.
