×

35 ஆண்டுக்கு பிறகு தமிழில் புராணப் படம்

சென்னை: தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை.பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் “ராகு கேது”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழின் புகழ்மிகு இயக்குநர் ஏபி.நாகராஜனுக்கு பிறகு, நம் புராணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. ராகுகேது உருவான வரலாறு, அவர்கள் மனித வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை அற்புதமான கதையாக இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் நடிகர் சமுத்திரகனி சிவனாகவும், கஸ்தூரி துர்கையாகவும், விக்னேஷ் மகாவிஷ்ணுவாகவும் நடித்துள்ளனர். மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். கதை, வசனம், பாடல்களை கே.பி. அறிவானந்தம். தயாரிப்பாளர் சாந்தி பாலசுந்தரம் தமிழரசன் தியேட்டர் சார்பில் தயாரிக்க, எஸ்.ஆனந்த், வி.உமாதேவி இணை தயாரிப்பு செய்துள்ளனர். ஒளிப்பதிவு – மோகன். இசை – பரணிதரன். எடிட்டிங் – பி.லெனின்.

Tags : Chennai ,Tamilarasan Theater ,Tamilmamani Durai ,Balasundaram ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்