×

பெண் நீதி பேசும் அனல்

சென்னை: செவன் பிக்சர்ஸ் சார்பாக சத்யப்ரியா தயாரிக்கும் படம் ‘அனல்’. இந்த படத்தில் சத்யப்ரியா கதையின் நாயகியாக நடிக்கிறார், இவருடன் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர், ஒளிப்பதிவு – ராஜேஷ்குமார், இசை -ரெஞ்சித் வாசுதேவ், எழுத்து, இயக்கம் – ஏ. குரு. இவர் இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர்.

ஏற்கனவே ‘வளையல்’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். ‘அனல்’ திரைப்படம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வால் அவர்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கான நீதியை எப்படி அடைகிறார்கள் என்பதை புதிய கோணத்தில் சொல்லப்பட்டுள்ளது. படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

Tags : Chennai ,Sathyapriya ,Seven Pictures ,Rajesh Kumar ,Renjith Vasudev ,A. Guru ,
× RELATED துரோகம் பண்றாங்க: செல்வராகவன் மீண்டும் பதிவு