×

மீண்டும் நடிக்க வந்தார் அப்பாஸ்

சென்னை: கடந்த பத்து வருடங்களுக்கு முன் சினிமாவை விட்டு விலகி நியூசிலாந்து சென்று குடும்பத்துடன் அப்பாஸ் செட்டில் ஆனார். இப்போது மீண்டும் நடிப்புக்குத் திரும்பி இருக்கிறார். அவர், ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இதை பியாண்ட் பிக்சர்ஸ் மூலம் ஜெயவர்த்தனன் தயாரிக்க, ஜெய்காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்கிறார். மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். கவுரி பிரியா, கதாநாயகியாக நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசைஅமைக்கிறார். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம் பற்றி மரியா ராஜா இளஞ்செழியன் கூறும்போது, “இது நகைச்சுவை நிரம்பிய குடும்பப்படமாக இருக்கும். இப்போதுபொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஜி.வி.பிரகாஷ், இதுவரை பண்ணாத கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அப்பாஸ் என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்பது இப்போதைக்கு சொல்ல முடியாது’’ என்றார்.

Tags : Abbas ,Chennai ,New Zealand ,G.V. Prakash Kumar ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்