×

பவன் கல்யாண் படத்தில் ராசி கன்னா

ஐதராபாத்: பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள ராசி கன்னா, சில படங்களில் சொந்தக்குரலில் பாடியிருக்கிறார். நாள்தோறும் தனது சோஷியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் அவருக்கு பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று, தற்போது துணை முதலமைச்சராக பதவி வகிக்கும் பவன் கல்யாண், தேர்தலுக்கு முன்பு ‘ஹரி ஹர வீர மல்லு’, ‘ஓஜி’, ‘உஸ்தாத் பகத்சிங்’ ஆகிய படங்களில் நடித்தார். தீவிர அரசியலில் ஈடுபட்ட அவரால் படப்பிடிப்புக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.

இந்நிலையில், திடீரென்று ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்துக்கு கால்ஷீட் கொடுத்து நடித்து முடித்தார். அப்படியே ‘ஓஜி’ படத்திலும் நடித்து முடித்தார். கடந்த சில வாரங்களாக ‘உஸ்தாத் பகத்சிங்’ படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, ஹரிஷ் சங்கர் எழுதி இயக்குகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இதில் ஹீரோயினாக ஸ்ரீலீலா நடிக்கும் நிலையில், மற்றொரு ஹீரோயினாக ராசி கன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால், ஸ்ரீலீலாவின் கேரக்டருக்கு முக்கியத்துவம் குறைக்கப்படும் என்று தெரிகிறது.

Tags : Raashi Khanna ,Hyderabad ,Pawan Kalyan ,Andhra Pradesh ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்