×

நடிகை ராஷ்மி கவுதம் மீது வழக்கு பதிவு

கண்டேன், மாப்பிள்ளை விநாயகர், பிரியமுடன் பிரியா போன்ற படங்களில் நடித்திருப்பதுடன் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் ராஷ்மி கவுதம். சில தினங்களுக்கு முன் இவர் விசாகப்பட்டினத்தில் வேகமாக கார் ஓட்டிச் சென்றார். கஜுவாக பகுதியில் அவர் சென்றபோது சாலையை கடக்க முயன்ற ஒருவர் மீது காரை ஏற்றியதாக கூறப்படுகிறது. இதில் அந்த நபர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ராஷ்மி கவுதமின் காரை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ராஷ்மி கூறும்போது,’இதில் என் மீது எந்த தவறும் இல்லை. பாதசாரிதான் வேகமாக சாலையை கடந்தார். எனவேதான் விபத்து ஏற்பட்டது. அது முழுக்க அவரது தவறு. நானும், எனது டிரைவரும் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தோம். அந்த கார் என்னுடையதல்ல’ என்றார்.

Tags : Rashmi Gautam ,
× RELATED ராஷ்மி கவுதம் ஏற்கும் ஷாக்கான வேடம்