ராஷ்மி கவுதம் ஏற்கும் ஷாக்கான வேடம்

மாப்பிள்ளை விநாயகர், கண்டேன் போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள  ராஷ்மி கவுதம் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். சமீபகாலமாக அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் புதிய பட வாய்ப்புகளுக்காக காத்திருந் தார். கவர்ச்சியாகவும் நடிக்க தயார் என்பதை உணர்த்த கிளாமர் புகைப் படங்களை அவ்வப்போது நெட்டில் வெளியிட்டு வந்தார். ஆனால் எதிர்பார்த்தளவுக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில் வெப் சீரிஸில் நடிக்க வாய்ப்பு வந்தது.

வெப் சீரிஸில் தற்போது சமந்தா, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல்வேறு நடிகைகள் நடிக்கின்றனர். சில வெப் சீரியல்கள் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படு கிறது. அதில் ராதிகா ஆப்தே போன்ற ஒரு சில நடிகைகள் துணிச்சலாக நடிக்கின்றனர். ராஷ்மி கவுதம் ஏற்றிருக்கும் பாத்திரமும் வித்தியாசமான வேடமாம். லெஸ்பியன் வேடத்தில் அவர் வெப் சீரியலில் நடிக்கிறார். இதனை சேகர் சுரி இயக்குகிறார்.

Related Stories:

>