×

சாய் பல்லவியை நெகிழவைத்த ‘ராமாயணா’

உலகப் புகழ்பெற்ற ராமாயணம் கதையை தழுவி நிதேஷ் திவாரி இயக்கியுள்ள பான் இந்தியா படம், ‘ராமாயணா: தி இன்ட்ரொடக்‌ஷன்’. இதன் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், 2வது பாகம் 2027 தீபாவளிக்கும் திரைக்கு வருகிறது. ஹாலிவுட் பிரபலம் ஹான்ஸ் ஸிம்மர், ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து இசை அமைக்கின்றனர். ராமராக ரன்பீர் கபூர், ராவணனாக யஷ், சீதையாக சாய் பல்லவி, லட்சுமணனாக ரவி தூபே, ஹனுமானாக சன்னி தியோல், ைககேயியாக ரகுல் பிரீத் சிங், மண்டோதரியாக காஜல் அகர்வால் நடிக்கின்றனர். தர் ராகவன் திரைக்கதை எழுதுகிறார்.

எட்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற டிஎன்இஜி என்ற நிறுவனம் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் முதல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதை தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்த சாய் பல்லவி, `அம்மா சீதாவின் அமோக ஆசிர்வாதங்களுடன், ராமாயண காவியத்தை மீண்டும் உருவாக்கும் பணியில், தெய்வீகத்தால் தேர்வு செய்யப்பட்டவர்களுடன் இணைந்து, தற்போது இப்பயணத்தை நான் நன்கு அனுபவிக்கிறேன். இதுபோன்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினருடன், நாம் அடைய முயற்சிக்கும் அற்புதத்தை நீங்கள் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Sai Pallavi ,Nitesh Tiwari ,Diwali ,Hollywood ,Hans Zimmer ,A.R. Rahman… ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்