×

தமிழுக்கு வரும் பாலிவுட் நடிகர்

வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் படம், ‘ரூட்: ரன்னிங் அவுட் ஆஃப் டைம்’. சயின்டிபிக் கிரைம் திரில்லரான இதை சூரியபிரதாப்.எஸ் இயக்குகிறார். இவர், ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ என்ற படத்தில், இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்திடம் அசோசியேட் டைரக்டராக பணியாற்றியவர். ஹீரோவாக கவுதம் ராம் கார்த்திக் நடிக்கிறார். அவருடன் இணைந்து பாலிவுட் நடிகர் அபார்ஷக்தி குரானா நடிக்கிறார். இதன்மூலம் அவர் தமிழில் அறிமுகமாகிறார். பிரபல பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவின் தம்பியான இவர், இந்தியில் வெளியான ‘ஸ்ட்ரீ’, ‘ஹெல்மட்’, ‘லூகா சுஃபி’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

கவுதம் ராம் கார்த்தி ஜோடியாக பவ்யா ட்ரிகா நடிக்கிறார். தனிஷ்டன் ஃபெர்னாண்டோ, ராஜராஜன் ஞானசம்பந்தம், சஞ்சய் சங்கர், ஷேக் முஜீப் இணைந்து தயாரிக்கின்றனர். படம் குறித்து சூரியபிரதாப்.எஸ் கூறுகையில், ‘ஒரு கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் அமைந்த கிரைம் திரில்லரை, அறிவியல் பின்னணியுடன், உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களுடன் சேர்த்து உருவாக்கும் முயற்சிதான் இப்படம். போலீஸ் அதிகாரியாக கவுதம் ராம் கார்த்திக் நடிக்கிறார். அவருக்கும், அபார்ஷக்தி குரானாவுக்கும் இடையிலான காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்க்கும். அர்ஜூன் ராஜா ஒளிப்பதிவு செய்ய, விதூஷணன் இசை அமைக்கிறார்’ என்றார்.

Tags : Bollywood ,Tamil ,Verus Productions ,Suriya Pratap S. ,Soundarya Rajinikanth ,Rajinikanth ,Gautham Ram ,
× RELATED துரோகம் பண்றாங்க: செல்வராகவன் மீண்டும் பதிவு