×

மகன்களுடன் ரவி மோகன் எச்சரித்த ஆர்த்தி

சென்னை: நடிகரும், தயாரிப்பாளருமான ரவி மோகனின் மூத்த மகன் ஆரவ் நேற்றுமுன்தினம் தன் பிறந்தநாளை கொண்டாடினார். மகனின் 15வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களுடன் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்தார் ஆர்த்தி ரவி. இதையடுத்து மகன்கள் ஆரவ், அயான் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு என் குறும்பாக்கள் என தெரிவித்தார் ரவி மோகன். அதே புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியிலும் போஸ்ட் செய்தார். அவர் வெளியிட்ட அந்த புகைப்படம் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டிருக்கிறது. ரவி மோகனை போன்றே மகன்களும் உயரமாக வளர்கிறார்கள். அப்பா மாதிரியே இருக்கிறார்கள் என ரசிகர்கள் கமென்ட் செய்தனர். இந்நிலையில், ‘எச்சரிக்கையாக இருக்கவும், மனிபுலேஷன் கூட அன்பு போன்று தெரியும்’ என இன்ஸ்டாவில் ஸ்டோரி போட்டிருக்கிறார் ஆர்த்தி. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Ravi Mohan ,Aarthi ,Chennai ,Aarav ,Aarthi Ravi ,Ayan… ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்