×

ஆன்லைன் கேமில் சிக்கிய யூடியூபர்களின் கதை டிரெண்டிங்

சென்னை, ஜூன் 25: கலையரசன், பிரியா லயா, பிரேம் குமார், பெசன்ட் ரவி, வித்யா போர்கியா, ஷிவன்யா, பிரியங்கா, கவுரி, பாலாஜி, தியாகராஜன், தயாளன் நடித்துள்ள படம், ‘டிரெண்டிங்’. ராம் பிலிம் பேக்டரி சார்பில் மீனாட்சி ஆனந்த் தயாரித்துள்ளார். சிவராஜ் எழுதி இயக்கியுள்ளார். சாம் சி.எஸ் இசை அமைக்க, பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார். அருண் அரங்கம் அமைக்க, நாகூரான் ராமச்சந்திரன் எடிட்டிங் செய்துள்ளார். குட்டி ரேவதி, கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுதியுள்ளனர்.

வரும் ஜூலை 18ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து சிவராஜ் கூறியதாவது:
இன்றைய காலக்கட்டத்தில் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் அம்சங்களில் ஒன்று, சமூக வலைத்தளங்கள். இதன்மூலம் இளம் தம்பதிகள் பதிவிடும் ரீல்ஸ் வீடியோக்களால் ஏற்படும் பல்வேறு ஆபத்துகள் மற்றும் சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்தி, முழுநீள கமர்ஷியல் படமாக இதை இயக்கியுள்ளேன். ஆன்லைனில் மூழ்கியுள்ள தம்பதிகளை பற்றிய கதை கொண்ட இப்படம், 3 பேர் கோணத்தில் நகரும். பிரபல யூடியூபர்கள் வேடங்களில் கலையரசன், பிரியா லயா நடித்துள்ளனர். ஆன்லைனில் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, அந்த கேம் இறுதியில் அவர்களை எந்த பிரச்னையில் சிக்க வைக்கிறது என்பது திரைக்கதை.

Tags : Chennai, ,Kalaiyarasan ,Priya Laya ,Prem Kumar ,Besant Ravi ,Vidya Borgia ,Shivanya ,Priyanka ,Gauri ,Balaji ,Thiagarajan ,Dayalan ,Meenakshi Anand ,Ram Film Factory ,Sivaraj… ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்