×

இனி அதிகமாக பேச மாட்டேன்; சொல்கிறார் தனுஷ்

ஐதராபாத்: சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழ், இந்தியில் வெளியான ‘குபேரா’ படத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இதில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது தனுஷ் பேசியதாவது:
இப்போது தியேட்டர்களில் படங்கள் ஓடுவதே கேள்விக்குறியாகி வருகிறது. ரத்தம், கத்தி, ஹெலிகாப்டர்கள் இடம்பெறும் ஆக்‌ஷன் படங்கள் மட்டுமே மக்களை தியேட்டர்களுக்கு அழைத்து வரும் என்ற மாயை நிலவுகிறது.

ஆனால், மனித உணர்வுகளும் மக்களை தியேட்டருக்கு அழைத்து வரும் என்ற நம்பிக்கையை ‘குபேரா’ படம் ஏற்படுத்தியுள்ளது. தமிழில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றது. சாதாரண மனிதர்களை பற்றி பேசிய அந்த படமும் மக்களை தியேட்டர்களுக்கு அழைத்து வந்தது. ‘வெற்றி கிடைக்கும்போது குறைவாக பேச வேண்டும்’ என்று என் அம்மா விஜயலட்சுமி சொன்னார். எனவே, இனி நான் அதிகமாக பேச மாட்டேன்.

 

Tags : Dhanush ,Hyderabad ,Shekhar Kammula ,Nagarjuna ,Rashmika Mandanna ,Jim Sarf ,Chiranjeevi ,
× RELATED துரோகம் பண்றாங்க: செல்வராகவன் மீண்டும் பதிவு