×

கார்த்திக் நேத்தாவின் குடிகார வாழ்க்கை படமானது

சென்னை: நியூ மாங்க் பிக்சர்ஸ் சார்பில் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள படம், ‘குட் டே’. இதை என்.அரவிந்தன் இயக்கியுள்ளார். வரும் 27ம் தேதி திரைக்கு வருகிறது. முக்கிய வேடங்களில் காளி வெங்கட், மைனா நந்தினி, பகவதி பெருமாள், வேல.ராமமூர்த்தி, ‘ஆடுகளம்’ முருகதாஸ், போஸ் வெங்கட், ஜீவா சுப்பிரமணியம் நடித்துள்ளனர். பூர்ணா ஜே.எஸ்.மைக்கேல் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். மதன் குணதேவ் எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். பாடல்கள் மற்றும் கூடுதல் வசனங்களை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

இப்படம் குறித்து பிரித்திவிராஜ் ராமலிங்கம் பேசும்போது, ‘எனது கையில் ஆயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு, துணிச்சலாக தயாரிக்க தொடங்கிய படம் இது. கார்த்திக் நேத்தாவின் குடிப்பழக்கம் மற்றும் அவரது மனநிலை குறித்து ஆராய்ந்தபோது இக்கதை பிறந்தது. திருப்பூர் பனியன் கம்பெனியில் பணியாற்றும் ஒரு எளிய ஊழியன், இக்கட்டான நேரத்தில் மேனேஜரின் வீட்டுக்கு செல்லும்போது, ஒரு இரவில் சந்திக்கும் மனிதர்களும், சம்பவங்களும்தான் கதை. இன்டர்கட் ஷாட் இல்லாமல் புதுமையான முறையில் படமாக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : Karthik Netha ,Chennai ,Prithviraj Ramalingam ,New Monk Pictures ,N. Aravindan ,Kali Venkat ,Myna Nandini ,Bhagavathy Perumal ,Vela Ramamoorthy ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்