புதுடெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனுக்கு கடந்த மே மாதம் 18ம் தேதி உச்ச நீதிமன்றம் தன்னுடைய தனிப்பட்ட சட்டப்பிரிவு 142 அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது. இந்த நிலையில், வழக்கில் குற்றவாளியாக இருக்கும் நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக கோரிக்கை மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், ‘சிறையில் நன்னடத்தையுடன் இருக்கிறோம். வெளியே வந்தாலும் எங்களால் எந்தவித தீங்கும் ஏற்படாது. அதனால், பேரறிவாளனை விடுதலை செய்தது போன்று இவ்வழக்கில் எங்களையும் விடுதலை செய்ய வேண்டும்’ என தெரிவித்திருந்தனர். இந்த 2 மனுக்களும் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்தனா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து பதிலளிக்க தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்து, விசாரணையை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்தனர்….
The post நளினி விடுதலை கோரி வழக்கு ஒன்றிய, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.
