×

க்ரோக் ஆபாச ஏஐ படங்கள் ஒன்றிய அரசிடம் அறிக்கை சமர்பித்தது எக்ஸ் நிறுவனம்

புதுடெல்லி: க்ரோக் ஆபாச ஏஐ படங்கள், வீடியோக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக ஒன்றிய அரசிடம் எக்ஸ் நிறுவனம் அறிக்கை சமர்பித்துள்ளது. எக்ஸ் சமூக ஊடகத்தின் செயற்கை நுண்ணறிவு சேவையான க்ரோக் மூலம் பெண்கள், சிறுமிகளின் ஆபாச படங்கள், வீடியோக்கள் உருவாக்கப்பட்டு இணையதளத்தில் பரப்பப்படுவதாக புகார்கள் எழுந்தன. இத்தகைய க்ரோக் ஆபாச ஏஐ படங்கள், வீடியோக்களை எக்ஸ் தளத்தில் இருந்து 72 மணி நேரத்தில் நீக்கவும், மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒன்றிய அரசு உத்தரவிட்டது.

இந்த கெடு நேற்று வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், எக்ஸ் தளம் நேற்று தனது அறிக்கையை ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இதுதொடர்பான விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. எக்ஸ் நிறுவனத்தின் பதில் மற்றும் சமர்பிப்புகளை ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. முன்னதாக, எக்ஸ் தளத்தில் ஆபாச மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்களை பதவியேற்றினால் அவற்றை நீக்குவதோடு, சம்மந்தப்பட்ட கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்படும் என எக்ஸ் நிறுவனம் கடந்த 4ம் தேதி அறிவிப்பு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : X ,Union government ,Crook ,New Delhi ,
× RELATED பங்குசந்தை வீழ்ச்சியால் ரூ.9 லட்சம் கோடி இழப்பு