×

ராஜமவுலி ஆஃபர் நிராகரித்தார் நானா படேகர்

மும்பை: ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க வந்த வாய்ப்ைப நானே படேகர் நிராகரித்துள்ளார். பாலிவுட்டின் முன்னணி நடிகரான நானா படேகர், தமிழில் ரஜினியுடன் ‘காலா’ படத்தில் நடித்திருந்தார். இவர் அதிகமான படங்களில் நடிப்பதில்லை. தனது கேரக்டர், கதை பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வார்.

ராஜாமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் மகேஷ்பாபுவின் அப்பா வேடத்தில் நடிக்க நானா படேகரை நடிக்க வைக்க ராஜமவுலி விரும்பினார். இதற்காக புனேயிலுள்ள நானா படேகரின் பண்ணை வீட்டுக்கு சென்று அவரிடம் ராஜமவுலி கதையை கூறினார். இந்த கேரக்டரில் நடிக்க ரூ.20 கோடி வரை சம்பளமாக தருவதாகவும் அவர் தெரிவித்தார். நானா படேகர் ஒரு படத்துக்கு ரூ.10 கோடி வரைதான் சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கதையை கேட்ட நானா படேகர், தனது கேரக்டர் வலுவானதாக இல்லை. அதனால் இதில் நடிக்க முடியாது என ராஜமவுலியிடம் கூறியுள்ளார். அவரது பதிலால் ராஜமவுலி அதிர்ச்சி அடைந்திருக்கிறார். நானா படேகரை சம்மதிக்க வைக்க முயன்றும் பயனில்லை என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags : Nana Patekar ,Rajamouli ,Mumbai ,Nane Patekar ,Bollywood ,Rajinikanth ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்