×

என்டிஆருடன் ஆட்டம் போடும் ராஷ்மிகா

இந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா, தீவிர ரசிகர்களின் ‘நேஷனல் கிரஷ்’ லிஸ்ட்டில் இருக்கிறார். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் கடந்த 2023ல் வெளியான ‘அனிமல்’ என்ற இந்தி படம் 900 கோடி ரூபாயும், கடந்த ஆண்டு அல்லு அர்ஜூனுடன் நடித்த ‘புஷ்பா 2: தி ரூல்’ என்ற தெலுங்கு படம் 1,800 கோடி ரூபாயும், பாலிவுட் நடிகர் விக்கி கவுஷல் நடிப்பில் வெளியான ‘சாவ்வா’ என்ற இந்தி படம் 800 கோடி ரூபாயும் வசூல் செய்து மாபெரும் வெற்றிபெற்றன. அடுத்தடுத்து 3 படங்கள் வசூலை வாரிக் குவித்ததால் ‘லக்கி ஹீரோயின்’ என்று போற்றப்பட்டார். ஆனால், இந்த பட்டம் அவருக்கு நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.

இந்த ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்து வெளியான ‘சிக்கந்தர்’ என்ற இந்தி படம் படுதோல்வி அடைந்தது. இதனால் ராஷ்மிகா மந்தனா டென்ஷனாகி விட்டார். சில நாட்கள் யாரிடமும் பேசாமல் இருந்தார். தற்போது தனது மனதை தேற்றிக்கொண்டார். இந்நிலையில், முன்னணி நடிகர் ஒருவர் படத்தில் ஒரு பாடலுக்கு அவர் ஆட்டம் போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘கேஜிஎஃப்’, ‘சலார்’ ஆகிய படங்களை இயக்கிய பிரசாந்த் நீல், தற்போது தெலுங்கு முன்னணி ஹீரோ ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இதில் ஜூனியர் என்டிஆருடன் ஒரு பாடலுக்கு நடனமாட வேண்டும் என்று படக்குழுவினர் அவரை அணுகினர். இதற்கு அவர் சம்மதித்தாரா, இல்லையா என்பது பற்றி தகவல் வெளியாகவில்லை. அடுத்து தனுஷ், நாகார்ஜூனா நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகும் ‘குபேரா’, தெலுங்கில் ‘தி கேர்ள் பிரெண்ட்’, இந்தியில் ‘தாமா’ ஆகிய படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags : Rashmika ,NTR ,Rashmika Mandanna ,Sandeep Reddy Vanga ,Allu… ,
× RELATED துரோகம் பண்றாங்க: செல்வராகவன் மீண்டும் பதிவு