×

ரியல் எஸ்டேட்டில் கோடிகளை அள்ளும் அமிதாப்

அமிதாப் பச்சன், ஷாரூக்கான் ஆகியோர் தங்கள் நண்பருடைய ரியல் எஸ்டேட்டில் தலா 10 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். சினிமாவில் பணம் சம்பாதிப்பதை தவிர்த்து, ரியல் எஸ்டேட்டில் அதிக முதலீடு செய்து வருபவர் அமிதாப் பச்சன். அவருக்கு மும்பையில் பல அலுவலகங்கள், பிளாட்டுகள் இருக்கின்றன. அவற்றை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கும் அவர், தனது மகன் அபிஷேக் பச்சனையும் கூட்டு சேர்த்துள்ளார். தற்போது அமிதாப் பச்சன் தனது நண்பரும், இந்தி திரைப்பட தயாரிப்பாளருமான ஆனந்த் பண்டிட் என்பவரின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்.

கடந்த டிசம்பர் மாதம் ஆனந்த் பண்டிட் தனது கட்டுமான நிறுவனத்துக்கு பங்குச்சந்தை மூலம் 400 கோடி ரூபாய் திரட்டினார். இதில் அமிதாப் பச்சன் 10 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். ஷாரூக்கானும் தனது குடும்ப டிரஸ்ட் மூலம் இந்நிறுவனத்தில் 10.1 கோடி ரூபாய்க்கு 6.75 லட்சம் பங்குகளை வாங்கியிருக்கிறார். ஹிரித்திக் ரோஷன், ஏக்தா கபூர், சாரா அலிகான், டைகர் ஷெராஃப், ராஜ்குமார் ராவ் ஆகியோரும் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இதுகுறித்து ஆனந்த் பண்டிட் கூறுகையில், ‘அமிதாப் பச்சனின் படங்களை பார்த்து வளர்ந்தேன்.

அவரது ‘திரிசூல்’ படம் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. என்னை அகமதாபாத்தில் இருந்து மும்பை வரும்படி தூண்டியது. அந்த விஜய் கேரக்டரால்தான் இன்றைக்கு நான் இங்கு இருக்கிறேன். அமிதாப் பச்சன் வீட்டுக்கு அருகில் 50 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கினேன். அமிதாப் பச்சன் தனது வீட்டை விரிவுபடுத்த நினைத்தபோது, எனது வீட்டை அவருக்கு விற்பனை செய்துவிட்டேன்’ என்றார்.

Tags : Amitabh Bachchan ,Shah Rukh Khan ,Mumbai ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்