×

ஜூனில் வெளியாகும் உயிர் மூச்சு

சென்னை: ஜோரா சினிமாஸ் நிறுவனம் சார்பில், மெர்சி ரோஸ்லின் ஜோதிமணி தயாரித்துள்ள படம் ‘உயிர் மூச்சு’ ஜோதிமணி கதை வசனத்தையும், வெங்கடேஷ் ஒளிப்பதிவையும் கையாண்டுள்ளனர்.விக்னேஷ்வர் நாயகனாகவும், சஹானா நாயகியாகவும் நடிக்க, தீபாசங்கர், மீசை ராஜேந்திரன், டெலிபோன் ராஜ், கிங்காங், திருப்பாச்சி பெஞ்சமின் இன்னும் பலர் நடித்துள்ளனர்.

இசையமைத்து, எடிட்டிங் செய்து, படத்தையும் இயக்கி உள்ள பிராட்வே சுந்தர் படத்தை பற்றி கூறியதாவது: மதுபோதையால் சீரழியும் குடும்பம், மாரடைப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி என வாழ்வியலுக்கு தேவையான தேவைகளையும் இதில் இணைத்து சமூகத்திற்கு தேவையான விழிப்புணர்வு படமாக இதை இயக்கி உள்ளேன் என்றார். சில்வர் ஸ்கிரீன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் அடுத்த மாதம் படத்தை வெளியிட உள்ளனர்.

 

Tags : Chennai ,Mercy Roslyn Jyothimani ,Jora Cinemas ,Jyothimani ,Venkatesh ,Vigneswar ,Sahana ,Deepashankar ,Meesai Rajendran ,Telephone Raj ,King Kong ,Thirupachchi Benjamin… ,
× RELATED துரோகம் பண்றாங்க: செல்வராகவன் மீண்டும் பதிவு