×

சகோதரர் இசையில் சோனியா படம்

விக்ராந்த், சோனியா அகர்வால், அலேக்யா, பதம் வேணு குமார், மோகன் ராமன், சுவாமிநாதன் நடித்துள்ள ‘வில்’ என்ற படத்தின் டீசரை அருண் விஜய் வெளியிட்டார். டி.எஸ்.பிரசன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார். சோனியா அகர்வால் சகோதரர் சவுரப் அகர்வால் இசை அமைத்துள்ளார். ஃபுட் ஸ்டெப்ஸ் புரொடக்‌ஷன்ஸ், கோத்தாரி மெட்ராஸ் இண்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளன. படம் குறித்து இயக்குனர் எஸ்.சிவராமன் கூறுகையில், ‘உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கு மேல் வழக்கறிஞராக பணியாற்றி வருவதால், மக்களுக்கு நன்மை செய்வதில் நீதிமன்றத்தின் பங்களிப்பு குறித்த விவரங்களை முழுமையாக விவரித்துள்ளேன். சொத்து வைத்திருப்பவர்கள் உயில் எழுதும்போது, ‘வில்’ என்ற நீதிமன்ற மற்றும் சட்டப்பூர்வமான விஷயத்தை மேற்கொள்ள வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளோம்.

ஒரு தலைமுறையினருக்கான சொத்து, அடுத்த தலைமுறைக்கு எப்படி சட்டப்பூர்வமாக உரிமையாகிறது என்பது தொடர்பான சட்ட நுணுக்கங்களும் இடம்பெறுகிறது. ஒருவர் தன்னுடைய சொத்துகளை, தன் விருப்பத்துக்குரிய ஒருவருக்கு எழுதி வைத்தால், அது அவருக்கு சட்டப்பூர்வமாக எப்படி சேரும் என்பது குறித்த குழப்பத்தை நீக்கும் வகையில் கதை உருவாக்கப்பட்டுள்ளது. சொத்து தொடர்பான சிக்கல்களுக்கு நீதிபதி புலன்விசாரணை மேற்கொள்ளும் விஷயம், ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும்’ என்றார்.

Tags : Sonia ,Arun Vijay ,Vikrant ,Sonia Agarwal ,Alekya ,Padam Venu Kumar ,Mohan Raman ,Swaminathan ,D.S. Prasanna ,Saurabh Agarwal ,
× RELATED துரோகம் பண்றாங்க: செல்வராகவன் மீண்டும் பதிவு