×

பிரபாஸ் ஜோடியாக தீபிகாவுக்கு பதிலாக திரிப்தி டிம்ரி

ஐதராபாத்: பான் இந்தியா ஸ்டார் பிரபாஸ், தற்போது ‘ஸ்பிரிட்’, ‘சலார் 2’, ‘தி ராஜா சாப்’ ஆகிய பான்
இந்தியா படங்களில் நடிக்கிறார். அவரது 25வது படமான இதை ‘அர்ஜூன் ரெட்டி’, ‘அனிமல்’ ஆகிய படங்களின் மூலமாக பிரபலமான சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிறார்.

முதலில் பிரபாஸ் ஜோடியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில், அதிக சம்பளம் கேட்டதாலும் மற்றும் கண்டிஷன்கள் போட்டதாலும், உடனடியாக படத்தில் இருந்து தீபிகா படுகோனை நீக்கிவிட்டனர். தற்போது அவருக்கு பதிலாக, ‘அனிமல்’ படத்தில் ரசிகர்களின் கவனத்ைத ஈர்த்த திரிப்தி டிம்ரியை ஒப்பந்தம் செய்து இருக்கின்றனர்.

 

Tags : Tripti Timri ,Deepika ,Prabhas ,Hyderabad ,Pan India ,Sandeep Reddy ,
× RELATED துரோகம் பண்றாங்க: செல்வராகவன் மீண்டும் பதிவு