×

நடிகர்களின் மேனேஜர்கள் கதை கேட்கிறாங்க: ஆர்.கே. செல்வமணி ஆதங்கம்

சென்னை: டி.ஆர். பாலா இயக்கத்தில் முகேன் ராவ், பவ்யா தரிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜின் -தி பெட்’. இப்படத்தில் ராதா ரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விவேக்- மெர்வின் இசை. இப்படத்தை டி ஆர் பாலா‍ மற்றும் அனில் குமார் ரெட்டி தயாரிப்பில் வெங்கடாச்சலம் இணைத் தயாரிப்பில் ஃபேரி டேல் பிக்சர்ஸ், ஏ ஆர் டூரிங் டாக்கீஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் விஜிவி கிரியேஷன்ஸ் மற்றும் சினிமாரஸா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து வழங்குகின்றன.

மே 30ம் தேதியன்று வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவில் படக்குழுவினருடன் நீதிபதி எஸ்.கே. கிருஷ்ணன், தயாரிப்பாளர் கேயார், ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, இயக்குநர் சங்க தலைவர் ஆர். வி. உதயகுமார் , செயலாளர் பேரரசு , துணைத் தலைவர் ஆர் . அரவிந்தராஜ், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஃபெப்சி தலைவர் ஆர். கே. செல்வமணி பேசுகையில், “வளர்ந்த நட்சத்திரங்களுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன். இயக்குனரிடமும், எழுத்தாளர்களிடமும் நீங்களே நேரடியாக கதையை கேளுங்கள். நடிகர்களின் மேலாளர்களும், உதவியாளர்களும் கதை கேட்க தொடங்கியதால் தான் சினிமா சீரழிகிறது. இதனால் திரைத்துறையில் ஆரோக்கியமான நட்பு ஏற்படுவதில்லை’’ என்றார்.

Tags : R.K. Selvamani Aadangam ,Chennai ,D.R. Bala ,Mugen Rao ,Bhavya Dharika ,Bala ,Radha Ravi ,Bala Saravanan ,Iman Annachi ,Nandu Anand ,Vadivukkarasi ,Vivek- Mervin.… ,
× RELATED துரோகம் பண்றாங்க: செல்வராகவன் மீண்டும் பதிவு