- அமீர் கான் ராஜமௌலி
- ஹைதெராபாத்
- தாதா சாஹேப் பால்கே
- நிதின் கக்கர்
- எஸ்.எஸ்.ராஜம ou லி
- வருண் குப்தா
- ராஜமௌலி
- எஸ். எஸ் கார்த்திகேயா

ஐதராபாத்: இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகுவதாக கடந்த 2023ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இப்படத்தை எஸ்.எஸ்.ராஜமௌலி வழங்க நிதின் கக்கர் இயக்குவதாகவும் வருண் குப்தா மற்றும் ராஜமௌலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயா தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ‘மேட் இன் இந்தியா’ என்ற தலைப்பில் தமிழ், தெலுங்கு உட்பட மொத்தம் ஆறு மொழிகளில் இப்படம் வெளியாகும் எனவும் ஒரு அறிவிப்பு வீடியோ வெளியாகியிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.
இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். தாதாசாகேப் பால்கே கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தாதா சாகேப் பால்கே பயோபிக்கை பாலிவுட்டில் ராஜ்குமார் ஹிரானி இயக்க உள்ளதாகவும் இதில் ஆமிர்கான் நடிப்பதாகவும் நேற்று அறிவிப்பு வெளியானது. இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். ஒரே சமயத்தில் ஆமிர்கானும் ராஜமவுலியும் மகாபாரதம் கதையை படமாக்குவதாக அறிவித்திருந்தனர். இப்போது தாதா சாகேப் கதையையும் இருவரும் உருவாக்க உள்ளதால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
