×

பலத்த சர்ச்சையில் சிக்கிய ஸ்ருதி நாராயணன் நடிக்கும் ‘கட்ஸ்’

சென்னை: புதுமுகம் ரங்கராஜ் தயாரித்து இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கட்ஸ்’. சமீபத்தில் பலத்த சர்ச்சையில் சிக்கி மீண்ட ஸ்ருதி நாராயணன் ஹீரோயினாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஸ்ரீலேகா ராஜேந்திரன், டெல்லி கணேஷ், சாய் தீனா நடித்துள்ளனர். மனோஜ் ஒளிப்பதிவு செய்ய, ஜோஸ் பிராங்க்ளின் இசை அமைத்துள்ளார். ஓபிஆர்பி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் ஜெயபாரதி ரங்கராஜ் தயாரித்துள்ளார். படம் குறித்து ஸ்ருதி நாராயணன் கூறுகையில், ‘இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குனருக்கு நன்றி. படப்பிடிப்பில் எனது கேரக்டருக்கு ஏற்ற நடிப்பை சொல்லிக்கொடுத்து நடிக்க வைத்தார்’ என்றார்.

பிறகு ரங்கராஜ் கூறும்போது, ‘சினிமாவில் நடிக்க 25 ஆண்டுகள் போராடினேன். நான் வாய்ப்பு கேட்டபோது, பதிலுக்கு அவர்கள் பணம் கேட்டார்கள். இதனால் மன உளைச்சல் அதிகமாகி, திரைத்துறையை விட்டே ேபாய்விட முடிவு செய்தேன். அப்போது எனது நண்பர்கள் குறும்படங்களை இயக்கினார்கள். 15 லட்ச ரூபாயில் ஒரு படத்தை உருவாக்க முடியும் என்று அவர்கள் சொன்னதை நம்பி தயாரிக்க ஆரம்பித்தேன். ஆனால், வெறும் 15 லட்ச ரூபாயை வைத்து எதுவும் செய்ய முடியாது என்று பிறகு தெரிந்துகொண்டேன். கிராமத்தில் இட்லி சுட்டு விற்பனை செய்யும் ஒரு சாதாரண தாய்க்கு மகனாக பிறந்த நான், இன்று ஹீரோவாகி இருக்கிறேன்’ என்றார்.

Tags : Shruti Narayan ,Rangaraj ,Srileka Rajendran ,Delhi Ganesh ,Chai Dina ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்