- சென்னை
- ஸ்ரீநாத்
- யோகி பாபு
- மணிகண்டன்
- கருணாகரன்
- ரமேஷ் திலக்
- விடிவி கணேஷ்
- Ravimaria
- மோத்தாய் ராஜேந்திரன்

சென்னை: நடிகரும் இயக்குனருமான ஸ்ரீநாத், ‘முத்திரை’, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்கியுள்ள படம், ‘லெக் பீஸ்’. யோகி பாபு, மணிகண்டன், கருணாகரன், ரமேஷ் திலக், விடிவி கணேஷ், ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன் என பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை ஹீரோ சினிமாஸ் சார்பில் சி.மணிகண்டன் தயாரித்திருக்கிறார். மார்ச் 7ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படம் பற்றி இயக்குனர் ஸ்ரீநாத் கூறியது: இது டார்க் காமெடி படம். வெவ்வேறு தொழில் செய்யும் நான்கு பேர், ஒரு சந்தர்ப்பத்தில் ஒன்றாக சந்திக்கிறார்கள்.
அவர்கள் மூலம் ஒரு பரபரப்பான விஷயம் வெளியே வருகிறது. அதுக்குப் பிறகு அவங்களுக்கு என்ன நடக்கிறது, அதில் இருந்து அவர்கள் எப்படி வெளியே வருகிறார்கள் என்பதுதான் கதை. இதே வகையில சில படங்கள் வந்திருந்தாலும் இது எல்லோரையும் ரசிக்க வைக்கும். திரைக்கதையில புதுசா முயற்சி பண்ணியிருக்கோம். மணிகண்டன், சவுரி முடி விற்கிறவர். கருணாகரன், கிளி ஜோசியம் பார்க்கிறவர். நான் பேய் விரட்டுகிறவன். மிமிக்ரி பண்ணுகிறவர் ரமேஷ் திலக். இவங்களைச் சுற்றிதான் கதை நடக்கும்.
