×

வருகிறது ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த்

லாஸ்ஏஞ்சல்ஸ்: வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி விநியோகிக்கும் யுனிவர்சல் பிக்சர்ஸின் ‘ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்’ டிரெய்லர் வெளியாகியுள்ளது. பல வருடங்களாக உலகம் முழுவதும் உள்ள ஜூராசிக் பார்க் பட ரசிகர்கள் மீண்டும் தங்களுக்கு விருப்பமான உலகத்தில் நுழைய உற்சாகமாக உள்ளனர்.

பாஃப்டா வின்னர் கரேத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ள இந்த ஆக்‌ஷன் அட்வென்ச்சர் படத்தில் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஸ்கார்லெட் ஜோஹன்சன், எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்றும் ஆலிவர் விருது வென்ற ஜொனாதன் பெய்லி, மஹெர்ஷாலா அலி மற்றும் லூனா பிளேஸ் மற்றும் ரூபர்ட் ஃப்ரெண்ட் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.

டிரெய்லர் வரலாற்றுக்கு முந்தைய பிரபஞ்சத்திற்கு பார்வையாளர்களை அழைத்து செல்கிறது. 3 மெகா டைனோசர்களை சுற்றி இந்த படத்தின் கதை நகர்கிறது. 2 நிமிடம் 25 வினாடிகள் டிரெய்லரில் பல ஆக்‌ஷன் சாகசங்களும் திருப்பங்களுடன் கூடிய அறிவியல் கதையும் நிறைந்துள்ளது. திரைப்படம் ஜூலை 4 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Tags : Los Angeles ,Universal Pictures' ,Warner Bros. Discovery ,
× RELATED பைக் சாகசம் வியக்க வைத்த நடிகை பார்வதி