×

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் காடுகளில் மட்டுமே படமாகும் மகேஷ் பாபு படம்

ஐதராபாத்: ‘பாகுபலி 1’, ‘பாகுபலி 2’, ‘ஆர்ஆர்ஆர்’ ஆகிய படங்களுக்குப் பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் பான் வேர்ல்ட் படத்துக்கான பணிகள் நடந்து வருகிறது. இதில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா நடிக்கின்றனர். தற்போது அவர்களுக்கு ஐதராபாத்தில் கேரக்டரில் நடிப்பதற்கான சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளுக்கு இடையே, தனது கையில் மகேஷ் பாபுவின் பாஸ்போர்ட்டுடன் எஸ்.எஸ்.ராஜமவுலி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இதற்கு மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா ஆகியோர் கமென்ட் செய்துள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கும் அடர்த்தியான காடுகளின் பின்னணியில் உருவாக்கப்படும் இப்படத்தின் முதல் பாகம், வரும் 2026ம் ஆண்டு திரைக்கு வருகிறது. பிறகு 2ம் பாகம் உருவாக்கப்படும் என்று படக்குழு கூறியது.

Tags : Mahesh Babu ,SS Rajamouli ,Hyderabad ,Priyanka Chopra ,
× RELATED ரிஜிஸ்டர் ஆபீசில் திருமணம் செய்துகொள்வேன்: ஸ்ருதி ஹாசன் அதிரடி