×

ரூ83 கோடிக்கு அபார்ட்மென்ட் வீட்டை விற்ற அமிதாப்

மும்பை: தனது அபார்ட்மென்ட் வீட்டை ரூ83 கோடிக்கு அமிதாப் பச்சன் விற்றுள்ளார். மும்பையில் பல பகுதிகளில் அமிதாப் பச்சனுக்கு சொந்தமான வீடுகள் உள்ளன. ஓஷுவரா பகுதியில் தி அட்லாண்டிஸ் குடியிருப்பு வளாகத்தில் உள்ள அபார்ட்மென்ட்டில் 7வது தளத்தில் அமிதாப் பச்சனுக்கு ஒரு வீடு இருந்தது. இந்த வீட்டை 2021ம் ஆண்டு ரூ31 கோடிக்கு அமிதாப் வாங்கியிருந்தார். 4800 சதுர அடி கொண்ட இந்த வீட்டில் ஜிம், மினி தியேட்டர், நீச்சல் குளம் வசதிகளும் இருந்தன. இந்த வீட்டை தற்போது 83 கோடி ரூபாய்க்கு அமிதாப் பச்சன் விற்றுள்ளார்.

இந்த வீட்டுக்காக ஆறு இயந்திரமயமாக்கப்பட்ட கார் பார்க்கிங் வசதி உள்ளது. வீடு விற்பனைக்கான இந்த பரிவர்த்தனைக்கு முத்திரைத்தாள் கட்டணம் ரூ4.98 கோடி மற்றும் பதிவு கட்டணம் ₹30 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டை டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வாங்கியுள்ளார். அமிதாப் பச்சன் எதற்காக இந்த வீட்டை விற்றார் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Tags : Amitabh Bachchan ,Mumbai ,Atlantis ,Oshuwara ,
× RELATED மலையாள சினிமாவில் தாக்கம் ஏற்படுத்திய நடிகர் ஸ்ரீனிவாசன் மரணம்