சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பிரமாண்டமாக தயாரித்து, ஹீரோவாக நடித்து, இசை அமைக்கும் படத்துக்கு ‘மெண்டல் மனதில்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை தனுஷ் வெளியிட்டார். ஹீரோயினாக மாதுரி ஜெயின் நடிக்கிறார்.
இவர், ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் ‘சிவகுமாரின் சபதம்’ என்ற படத்தில் நடித்தவர். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் குணா எக்ஸிகியூட்டிவ் புரொடியூசராகப் பணியாற்றுகிறார். பாலாஜி படத்தொகுப்பு செய்ய, ஆர்.கே.விஜய் முருகன் அரங்கம் அமைக்கிறார். முழுநீள காதல் கதை கொண்ட இதன் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கி உள்ளது.
