×

மழலையர் பள்ளி நடத்தும் சமந்தா

ஐதராபாத்: ஐதராபாத்தில் மழலையர் பள்ளி நடத்தி வருகிறார் நடிகை சமந்தா. நாக சைதன்யாவுடன் விவாகரத்து ஆன பிறகு, ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் ஏகம் என்ற மழலையர் பள்ளியை திறந்துள்ளார் சமந்தா. தனக்கு ஏதாவது பிரச்னையோ, மன அழுத்தமோ இருந்தால் உடனே இந்த பள்ளிக்குச் சென்று குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித் தருவதையும் அவர் வழக்கமாக வைத்துள்ளார். மேலும் இங்கு 16 டீச்சர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த பள்ளி வளாகத்தில் நேற்று முன்தினம் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் சமந்தா கலந்துகொண்டு குழந்தைகளை தனித்தனியே உற்சாகப்படுத்தினார். நயன்தாராவைப் போல் ரியல் எஸ்டேட், அழகுசாதனப் பொருட்கள் விற்பனை ஆகிய தொழில்களில் கவனம் செலுத்தும் சமந்தா, இந்த பள்ளியை மட்டும் தனது மன திருப்திக்காக நடத்துவதாக சொல்கிறார். இந்த பள்ளியில் சில ஏழைக் குழந்தைகளுக்கு கட்டணம் வாங்காமல் சமந்தா சேர்த்திருக்கிறார். இதை அறிந்து ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

Tags : Samantha ,Hyderabad ,Naga Chaitanya ,Ekam ,Jubilee Hills, Hyderabad ,
× RELATED பல நடிகைகள் மறுத்த வேடத்தில் சமந்தா நடித்ததால் பண்ணை வீடு பரிசு