×

விடுதலை 2 கொடுத்த திருப்புமுனை: ஜெய்வந்த் நெகிழ்ச்சி

சென்னை: ‘விடுதலை 2’ படத்தின் இண்டர்வெல் காட்சியில் பண்ணையாராக நடித்தவர் நடிகர் ஜெய்வந்த். 15 வருடமாக சினிமாவில் நிலையான இடத்திற்காக போராடி வந்த ஜெய்வந்துக்கு இந்த திரைப்படம் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

இது குறித்து ஜெய்வந்த் கூறியது: இது 15 வருட கனவு என கூறலாம். என்னுடைய முதல் திரைப்படம் 2009-ம் ஆண்டு வெளிவந்தது. வெற்றிமாறன் சார் இந்த வாய்ப்பை கொடுத்தது ஒரு ஆசீர்வாதமாக பார்க்கிறேன். நான் இதற்கு முன் மூன்று திரைப்படங்களில் நடித்தேன். ‘மத்திய சென்னை’, ‘காட்டுப்பய காளி’, ‘தீர்க்கதரிசி’ ஆகிய படங்களில் நடித்தேன். ஆனால், என்னை ஒரு நடிகனாக அடையாளப்படுத்தியுள்ளது `விடுதலை 2’.

இனி சினிமாவில் எனக்கு திருப்புமுனைதான். நல்ல பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன். ஹீரோவாக நடித்திருந்தாலும் இனி அப்படித்தான் நடிப்பேன் என்றில்லை. எந்த கேரக்டராக இருந்தாலும் அதில் தனி முத்திரை பதிப்பேன். குறிப்பாக காமெடி வேடத்தில் நடிக்கவும் ஆர்வத்துடன் இருக்கிறேன். இப்போதைக்கு படம் தயாரிக்கும் எண்ணமில்லை. பிறகு அதைப் பற்றி யோசிப்பேன். இவ்வாறு ஜெய்வந்த் கூறினார்.

Tags : Chennai ,Jaywant ,
× RELATED சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...