சென்னை: இளையராஜாவின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகியிருக்கிறது. ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘‘எந்தப் பாடலுக்குமே நான் ஐந்து நிமிடங்களுக்கு மேல் கம்போஸ் செய்வதற்கு நேரம் எடுத்துக்கொண்டதில்லை. இயக்குநர்கள் சிச்சுவேஷனை சொல்ல ஆரம்பித்ததுமே நான் ட்யூனை பாட ஆரம்பித்துவிடுவேன். பின்னணி இசைக்கும் பெரிதாக நேரம் எடுத்துக்கொள்வதில்லை.
படத்தின் கதை பிடித்திருந்தால் அந்த படத்துக்கு இசையமைக்கிறேன். டைரக்டர்கள் கதை சொல்லும்போதே படத்தை பற்றிய உருவம் எனக்கு கிடைத்துவிடும். என்னுடைய கம்போஸிங் அறையில் இயக்குனர் மட்டும்தான் இருப்பார். தயாரிப்பாளர் இருக்கமாட்டார். அவருக்கு அனுமதி கிடையாது. பணம் கொடுப்பதற்கு மட்டும்தான் வர வேண்டும் (சிரித்துக்கொண்டே சொல்கிறார்). அவர்களை வரக்கூடாது என்று நான் சொல்லவில்லை. அவர்களால் வர முடியவில்லை’’ என்றார்.