×

பல நடிகைகள் மறுத்த வேடத்தில் சமந்தா நடித்ததால் பண்ணை வீடு பரிசு

ஐதராபாத்: தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ், பல படங்களை தயாரித்துள்ளார். தனது மகன் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸை நாயகனாக அறிமுகப்படுத்தி 2014ம் ஆண்டில் `அல்லுடு சீனு` படத்தை தயாரித்தார். மகனை பிரமாண்டமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பெரிய நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களை அப்படத்திற்கு அழைத்து வந்தார். மகனுக்கு ஜோடியாக முன்னணி நடிகையை நடிக்க கேட்டார்.

அப்போது பிரபலமாக இருந்த ஒரு நடிகை நடிக்க மறுத்துள்ளார். அதுபோல் மேலும் சில முன்னணி நடிகைகளை கேட்டும் அவர்களும் புதுமுக ஹீரோவுடன் நடிக்க முடியாது என சொல்லிவிட்டார்கள். அப்போதுதான் சமந்தா, தெலுங்கில் டாப்பில் இருந்தார். அவரிடம் கேட்டதும் கதை கூட கேட்காமல் நடிக்க சம்மதித்துள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனர் விவி. விநாயக் இயக்கினார். `அல்லுடு சீனு` வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று, தயாரிப்பாளராக தனக்கு லாபம் ஈட்டியதால், அந்த மகிழ்ச்சியில் சமந்தாவுக்கு பண்ணை வீடு பரிசாக அளித்தாராம் பெல்லம்கொண்டா சுரேஷ்.

‘எனது மகனுடன் பிரபல நடிகைகள் பலரும் நடிக்க மறுத்த நிலையில், சமந்தா மட்டுமே அப்போதிருந்த அவரது மார்க்கெட், இமேஜை தூக்கி எறிந்து எனது மகனுடன் நடித்தார். அதனால் ஆரம்பத்தில் அவருக்கு 25 லட்சம் ரூபாய் கொடுத்தேன். படம் எனக்கு லாபம் தந்ததும் பண்ணை வீட்டை அவருக்கு வழங்கினேன்’ என சமீபத்தில் எஃப்எம் ஒன்றின் நேர்காணலில் பெல்லம்கொண்டா சுரேஷ் தெரிவித்தார்.

Tags : Samantha ,Hyderabad ,Bellamkonda Suresh ,Bellamkonda Sai Srinivas ,
× RELATED மழலையர் பள்ளி நடத்தும் சமந்தா