×

மோகன்லால், மம்மூட்டி படத்துக்கு வெளிநாடுகளில் 150 நாட்கள் படப்பிடிப்பு

சென்னை: மலையாளத்தில் ஜோஷி இயக்கத்தில், பிரபல நடிகர் திலீப் தயாரிப்பில், கடந்த 2008 நவம்பர் 5ம் தேதியன்று திரைக்கு வந்த படம், ‘ட்ெவன்டி: 20’. இதில் இணைந்து நடித்திருந்த மோகன்லால், மம்மூட்டி இருவரும் 16 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் மலையாளப் படத்தை மகேஷ் நாராயணன் இயக்குகிறார். இன்னும் பெயரிடவில்லை. இப்படத்தின் தொடக்க விழா பூஜையில் பங்கேற்ற மோகன்லால், தீபம் ஏற்றி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

முக்கிய வேடங்களில் நயன்தாரா, பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், ரஞ்சி பணிக்கர், ராஜீவ் மேனன், டேனிஷ் ஹூசைன், ஷாஹீன் சித்திக், சனல் அமன், ரேவதி, தர்ஷனா ராஜேந்திரன், செரீன் ஷிஹாப், இயக்குனர் பிரகாஷ் பெலவாடி நடிக்கின்றனர்.

ஆண்டோ ஜோசப், சி.ஆர்.சலீம், சுபாஷ் ஜார்ஜ் மானுவல் இணைந்து தயாரிக்கின்றனர். மகேஷ் நாராயணன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார். மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்கிறார். கொச்சி, இலங்கை, லண்டன், அபுதாபி, அஜர்பைஜான், தாய்லாந்து, விசாகப்பட்டினம், ஐதராபாத், டெல்லி ஆகிய பகுதிகளில் 150 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்படுகிறது. ஏஎன்என் மெகா மீடியா படத்தை வெளியிடுகிறது.

Tags : Mohanlal ,Mammootty ,Chennai ,Joshi ,Dileep ,
× RELATED பைக் சாகசம் வியக்க வைத்த நடிகை பார்வதி