×

விடாமுயற்சி ஷூட்டிங் முடிந்தது

சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் மற்றும் இயக்குனர் மகிழ் திருமேனி காம்பினேஷனில் உருவாகி வரும் படம் ‘விடாமுயற்சி’. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு முடிந்துவிட்டது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இயக்குனர் மகிழ் திருமேனி, கதாநாயகன் அஜித் மற்றும் படத்தின் பணிபுரிந்த அனைவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு, விடாமுயற்சி படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டது என லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post விடாமுயற்சி ஷூட்டிங் முடிந்தது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Ajith ,Mizh Thirumeni ,Lyca ,Anirudh ,Trisha ,Arjun ,Aarav ,Regina ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மாஜி விளையாட்டு வீரர் ஓய்வூதியம் பெற அழைப்பு