×

விஜய் தேவரகொண்டா ஜோடியாகும் கியரா

ஐதராபாத்: விஜய் தேவரகொண்டா ஜோடியாக கியரா அத்வானி நடிக்க உள்ளார். பாலிவுட் நடிகையான கியரா அத்வானி, தெலுங்கில் பரத் அனே நேனு, விநய விதேய ராமா ஆகிய படங்களில் நடித்தார். இப்போது ராம்சரண் ஜோடியாக ஷங்கர் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து மீண்டும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடி சேருகிறார். இந்த படத்தை நின்னு கோரி பட இயக்குனர் ஷிவா நிர்வானா இயக்குகிறார். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. லைகர் படத்தில் நடித்து வரும் விஜய் தேவரகொண்டா, அடுத்ததாக புஷ்பா பட இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிக்கிறார். அதில் நடித்த படியே ஷிவா நிர்வானா படத்திலும் நடிக்க உள்ளார்….

The post விஜய் தேவரகொண்டா ஜோடியாகும் கியரா appeared first on Dinakaran.

Tags : Vijay Deverakonda ,Kiara ,Hyderabad ,Kiara Advani ,Vijay Devarakonda ,Bollywood ,Bharat ,
× RELATED விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்பட...