×

வேதாரண்யம் மகளிர் சுயஉதவி குழுவிற்கு ரூ.20 லட்சம் கடனுதவி

 

வேதாரண்யம், ஆக.2: வேதாரண்யம் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வங்கி செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். வேதாரணயம் நகர்மன்ற தலைவரும், வேதாரண்யம் சிறு மற்றும் குறு உப்பு உற்பத்தியாளர்கள் இணைய தலைவர் புகழேந்தி கலந்து கொண்டு அகஸ்தியன் பள்ளி மாதா மகளிர் சுயஉதவி குழுவிற்கு ரூ.20 லட்சம் கடன் உதவிக்கான காசோலையை வழங்கினார். நிகழ்ச்சியில் வங்கி உதவியாளர்கள் மகாராஜன், கண்ணன் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Vedaranyam Women's Self-Help Group ,Vedaranyam ,Vedaranyam City Cooperative Credit Society for Women's Self-Help Group ,Bank Secretary ,Manikandan ,Vedaranyam Municipal Council ,Vedaranyam Small ,Marginal Salt Producers Association ,President ,Pugazhendi ,Agasthyan Palli Mata Women's Self-Help Group ,Maharajan ,Kannan and Women's Self-Help Group ,
× RELATED இலவச மருத்துவ முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்