- துணை முதல்வர்
- ஜெயங்கொண்டம்
- துணை பிரதமர்
- உதயநிதி ஸ்டாலின்
- அரியலூர் மாவட்டம்
- போக்குவரத்து மற்றும் மின்சாரம் அமைச்சர்
ஜெயங்கொண்டம், டிச. 22: அரியலூர் மாவட்டம் அருகே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 48வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 6 கிலோ மீட்டர் தூரம் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தொடங்கி வைத்து வெற்றி பெற்ற முதல் ஐந்து வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பொன்னேரி மற்றும் ஆமணக்கந்தோண்டி கிராமத்தில் இருந்து ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு வரை 6 கிலோமீட்டர் இந்த போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னதாக ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன், ஜெயங்கொண்டம் ஒன்றிய பொறுப்பாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு மராத்தான் போட்டியை தொடங்கி வைத்து, வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
மேலும் மராத்தான் போட்டியில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி ஒருவரை பாராட்டி பரிசு வழங்கினார். ஆண்கள், பொது பிரிவு ஆண்கள் 18 வயதிற்கு கீழ், மற்றும் பெண்கள் உள்ளிட்ட மூன்று பிரிவுகளாக நடைபெற்ற 6 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியில் முதல் 5 நபர்களுக்கு ரூ.1,000 முதல் 10 ஆயிரம் வரை பரிசு தொகை வழங்கப்பட்டது.
இதில் காஞ்சிபுரம், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், சிதம்பரம், பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வீரர்கள் வீராங்கனைகள் என 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
