- செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம்
- நாகப்பட்டினம்
- நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
- தமிழ்நாடு அரசு செவிலியர் மேம்பாட்டு சங்கம்
- நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி...
நாகப்பட்டினம், டிச.22: நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன் தமிழ்நாடு அரசு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.சிவபிரசாத் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். அனைத்து மருந்தாளுனர் சங்க தலைவர் பாஸ்கரன், மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் மூர்த்தி, மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்க மாநில துணைத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கோரி கடந்த 18ம் தேதி சென்னையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க தலைவர் ரமேஷ், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க தலைவர் ஜம்ருத்நிஷா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் சித்ரா, முன்னாள் மாவட்ட செயலாளர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
