×

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அளித்த புகாரின் மீது உச்ச நீதிமன்றம் நடவடிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா நேற்று வெளியிட்ட அறிக்கை:
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது புகார் மனு அளித்திருக்கிறார். இதன் தொடர்ச்சியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தன் முன் ஆஜராக வேண்டும் என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் சம்மன் அனுப்பி திடீரென விசாரணைக்கு அழைத்தது அநீதியாகும். வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அளித்த புகாரின் மீது உச்ச நீதிமன்றம் உரிய நடவடிக்கைகளைத் தொடங்கிட வேண்டும். இவ்வாறு ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

The post வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அளித்த புகாரின் மீது உச்ச நீதிமன்றம் நடவடிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Vanjinathan ,Jawahirulla ,Chennai ,Humanist People's Party ,M. H. ,Attorney ,Madurai ,Chief Justice ,Judge ,G. R. ,Swaminathan ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள்...