×

தவெக தவழும் குழந்தைதான்: செங்கோட்டையன் ஒப்புதல்

கோவை:தவெக தவழும் குழந்தைதான் என்று செங்கோட்டையன் ஒப்புதல் அளித்து உள்ளார். கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: எஸ்.ஐ.ஆர். குறித்து தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதுவே பொருத்தமானதாக இருக்கும். ஈரோடு பொதுகூட்டத்திற்கு பின்னர் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஒரு கருத்தை சொல்கின்றனர்.
தவழும் குழந்தைதான் பெரியவர் ஆவார்கள். பெரியவர் ஆனதற்கு அப்புறம்தான், தன்னுடைய தன்னாட்சியை நடத்துவார்கள்.

தவெகவின் அடுத்த பொது கூட்டம் குறித்து இன்று மாலை அவரிடம் (விஜய்யிடம்) பேசிவிட்டு எந்த இடம் என்பதை முடிவு செய்வோம். 2026 சட்டபேரவை தேர்தல் கூட்டணியை பொறுத்தமட்டில் எல்லா முடிவையும் விஜய்தான் எடுப்பார். எங்களைப் பொறுத்த வரையிலும், பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு, எங்கள் திருப்புமுனை எப்படி அமைந்து இருக்கிறது என நாடே வியக்கும்’’ இவ்வாறு அவர் கூறினார். தவெகதான் களத்தில் இல்லாத கட்சி என பா.ஜ. மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்து இருக்கிறாரே என்ற கேள்விக்கு, ‘‘அது அவருடைய கருத்து. களத்தில் இருக்கிறோமா? இல்லையா? என்பதை தேர்தல் முடிவுகள்தான் தீர்ப்பளிக்கும்’’ என செங்கோட்டையன் பதில் அளித்தார்.

Tags : Thaveka ,Sengottaiyan ,Coimbatore ,Executive Committee ,Chief Coordinator ,Coimbatore Airport ,Vijay ,SIR ,
× RELATED ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்