×

மோடியின் வெளியுறவுக் கொள்கை தோல்வி .. அமெரிக்காவில் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி காங்கிரஸ் விமர்சனம்


டெல்லி : அமெரிக்காவில் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி உள்ள காங்கிரஸ் கட்சி, இந்தியாவின் வெளியுறவு கொள்கை தோல்வி அடைந்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் ஆப்ரேஷன் சிந்தூரை தாம் நிறுத்தியதாக 25வது முறையாக அதிபர் டிர்ம்ப் கூறியதை சுட்டிக்காட்டி உள்ளார். சண்டையை நிறுத்தாவிட்டால், தங்களுடனான வர்த்தக ஒப்பந்தம் கிடையாது என 2025 – மே – 10 ஆம் தேதி டிரம்ப் கூறியதை சுட்டிக்காட்டி உள்ள ஜெய்ராம் ரமேஷ், அமெரிக்காவின் சென்ட்ரல் கமண்ட் மைக்கேல் குரில்லா, தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் முக்கிய பங்காற்றுவதாக தெரிவித்ததை சுட்டிக்காட்டி உள்ளார்.

பாகிஸ்தான் ராணுவ தளபதி அஷிம் முனீரை வெள்ளை மாளிகைக்கு அழைத்து, அதிபர் டிரம்ப் விருந்து கொடுத்ததை சுட்டிக்காட்டி உள்ள ஜெய்ராம் ரமேஷ் பஹல்காம் தாக்குதலுக்கு 2 மாதங்கள் முன்பு, வன்முறை, மற்றும் வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் பேசிய அஷிம் முனீரை அழைத்து டிரம்ப் உபசரித்ததை சுட்டிக்காட்டி உள்ளார். சனிக்கிழமை பாகிஸ்தான் துணைப் பிரதமரை, அமெரிக்காவின் செயலாளர் மார்கோ ரூபியா சந்தித்ததையும் இவை அனைத்தும் வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவின் தோல்வி என்றும் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

The post மோடியின் வெளியுறவுக் கொள்கை தோல்வி .. அமெரிக்காவில் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி காங்கிரஸ் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Pakistan ,United States ,Delhi ,Congress party ,India ,Congress ,Senior Leader ,Jairam Ramesh ,Dinakaran ,
× RELATED ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்