×

சீனா ஓபன் பேட்மின்டன் மியாசாகியை ஒடுக்கி சிந்து வெற்றி கீதம்: 2வது சுற்றுக்கு முன்னேறினார்

சாங்ஸூ: சீன ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் போட்டியில் நேற்று, இந்திய நம்பிக்கை நட்சத்திரம் பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனையை அபாரமாக வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். சீனாவின் சாங்ஸூ நகரில் சீன ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை டொமோகா மியாஸாகி மோதினர்.

இப்போட்டியின் முதல் செட்டை, 21-15 என்ற புள்ளிக் கணக்கில் சிந்து அபாரமாக கைப்பற்றினார். இருப்பினும் 2வது செட்டில் சுதாரித்து ஆடிய மியாஸாகி, 21-8 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். வெற்றியை தீர்மானிக்கும் இறுதிச் செட்டில் அநாயாசமாக ஆடிய சிந்து, 21-17 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

The post சீனா ஓபன் பேட்மின்டன் மியாசாகியை ஒடுக்கி சிந்து வெற்றி கீதம்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் appeared first on Dinakaran.

Tags : China Open Badminton ,Miyazaki ,Sindhu ,Changzhou ,Chinese Open Badminton Women's Singles Tournament ,B. V. Sindhu ,Japan ,Chinese Open badminton ,Changzhou, China ,Sindh Victory ,Dinakaran ,
× RELATED இறுதிப் போட்டியில் இந்தியாவை...