×

மாணவியை கடத்தி விஏஓ 2வது திருமணம்

மேட்டூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் தெற்குகாடு பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த 22 வயது மாணவி, கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும், ஓமலூர் வட்டம் தும்பிப்பாடியில், விஏஓவாக பணிபுரியும் வினோத்குமார் (38) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வினோத்குமார் ஏற்கனவே திருமணமானவர்.

இந்நிலையில், ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டதாக அவரது பெற்றோர், உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். காவல்துறையில் புகார் அளித்தும், மாணவி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சிக்குள்ளான பெற்றோர் மற்றும் உறவினர்கள் மேட்டூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதியளித்தபின் அனைவரும் கலைந்து சென்றனர்.

The post மாணவியை கடத்தி விஏஓ 2வது திருமணம் appeared first on Dinakaran.

Tags : VOO ,Mattur ,Balaji Nagar ,Salem district ,Atur South Gadu ,Coimbatore ,Vinodkumar ,Omalur Circle Tumpipadi ,
× RELATED ஆலங்குளம் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்ட 5 பேர் கைது